காசநோய் இல்லாத பாரதம் என்ற இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து காச நோயாளிகளும் விரைந்து குணம் அடையும் நோக்கில் ஓராண்டும் முழுவதும் மாதம் தோறும் அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்க யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. இதன் மூலம் புதுவையில் உள்ள 658 காச நோயாளிகளுக்கு மாதம் தலா 3 கிலோ அரிசி, ஒன்றரை கிலோ பருப்பு, 250 கிராம் எண்ணெய், 1 கிலோ பால் பவுடர் அடங்கிய தொகுப்பு 12 மாதங்களு